விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ்-8 நிகழ்ச்சியில் ஒரு சுவாரஷ்யமான விடையம் நடைபெறுள்ளது. அதாவது பிக் பாஸ் போட்டியாளர் தீபக்- பவித்ராவின் கையை பிடித்து ப்ரோபோசல் செய்துள்ளார். இதனை பார்த்த மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியாகி விட்டார்கள். இணையத்திலும் இந்த வீடியோ ரசிகர்களிடத்தே வைரலாகி வருகிறது.
விஜய் டிவி பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபற்றி இருப்பவர் தீபக். இவர் மைக் சரியாக மாட்டவில்லை என்று கன்பிரஷன் ரூக்குக்கு அழைத்த பிக் பாஸ் அவருக்கு பனிஷ்மெண்ட்டாக ஒரு டாஸ்க் கொடுக்கிறார். பவித்ரா ஜனனிக்கு ப்ரோபோஸ் செய்ய வேண்டும் என்று கூறுகிறார், முதலில் குழம்பிய தீபக் பின்னர் வெளியே வந்து பவித்ரா ஜனனி தனியாக வெளியே போகும் நேரத்தில் அவரின் கையை புடித்து இழுக்கிறார். "உன்கிட்ட ஒன்னு சொல்லணும்" என்று சொல்கிறார் தீபக். இதனால் பயந்த பவித்ரா "என்ன அண்ணா என்னாச்சி என்று கேட்கிறார்? தீபக் உடனே நான் டாஸ்க் பண்ணனுமா வேணாமா என்று கேட்க போட்டியாளர்கள் பண்ணனும் பண்ணணும் என்று சிரித்து கொண்டே சொல்கிறார்கள்.
பின்னர் பவித்ரா "இதுக்கு நானா கிடைச்சேன்" என்று தீபக் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். அப்போது அருகில் வந்த தீபக் "நீயும் சரியா மைக் மாட்டனும் இனி மைக் யாரு ஒழுங்கா மாட்டாம இருக்காங்க அப்டிங்கிறதையும் பார்க்கணும் இனி ஒழுங்கா மைக்மாட்டு" என்று லவ் ப்ரோபோஸ் செய்வது போல சொல்லிவிட்டு செல்கிறார். இதனை பார்த்த மற்ற போட்டியாளர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Deepak Proposing ❤️ #Pavithra ‼️
😱😱#BiggBossTamil8 #BiggBossTamil #BiggBossTamilSeason8 #Soundariya #Muthukumaran #Jacqueliene pic.twitter.com/nD2X1uOF9c
Listen News!