தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராக, தயாரிப்பாளராக, பாடல் ஆசிரியராக பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகின்றார் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தனுஷ் தற்போது இட்லி கடை மற்றும் என் மேல் என்னடி கோபம் என்ற படங்களை இயக்கி நடித்து வருகின்றார். அத்துடன் தெலுங்கு இயக்குனர் உடன் கூட்டணி அமைத்து குபேரா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் இளையராஜாவின் பயோபிக்கில் நடிப்பதற்கு தனுஷ் ஒப்பந்தமானார். இது தொடர்பிலான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
d_i_a
எனினும் இந்த படம் திடீரென கைவிடப்படுவதாக பல தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனாலும் அதிகாரபூர்வமாகவே எந்த ஒரு தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை.
இந்த நிலையில், வலைப்பேச்சு சேனலில் உள்ளவர்கள் இளையராஜாவின் பயோபிக் படத்தில் தனுஷ் நடிக்கின்றாரா? இல்லையா? என்பது பற்றிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்கள்.
அதில் அவர்கள் தெரிவிக்கையில், இளையராஜாவின் பயோபிக் ட்ராப் ஆகவில்லை. இதனை உறுதியா சொல்லுகின்றார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜூலைக்கு பிறகு ஆரம்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் கூட்டணியில் இருந்த மும்பை நிறுவனம் ஒன்று பின்வாங்கிய நிலையில், அதற்கு பதிலாக புதிய நிறுவனம் ஒன்று கைகோர்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
அதாவது, தனுஷ் தயாரிப்பாளராக காணப்பட்டபோதும் இந்த படத்தை அவர் தயாரிக்கவில்லை. சமீபத்தில் அவர் டெல்லி சென்ற போது அங்குள்ள இரண்டு, மூன்று கார்ப்பரேட் கம்பெனியோடு மீட்டிங் நடத்தியுள்ளார். அது இந்த இளையராஜாவின் பயோபிக்காகத்தான்.
அதில் ஒரு கார்ப்பரேட் கம்பெனியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இளையராஜாவின் பயோபிக்கை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்ற முடிவில் தனுஷ் உள்ளார். இதுதான் தனுஷின் குறிக்கோள். இந்த படத்தை கைவிடுவதற்கு அவர் கொஞ்சமும் யோசிக்கவில்லை என்று வலைப்பேச்சு டீமில் உள்ளவர்கள் தெரிவித்து உள்ளார்கள்.
Listen News!