• Mar 19 2025

"டிராகன்" திரைப்பட OTT வெளியிட்டு தேதி எப்போது...? அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..

Mathumitha / 18 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தற்போது தனது "லவ் டுடே" படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார்.மேலும் இப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் ரூ. 100 கோடி வசூலைப் பெற்றுள்ள இவர் தற்போது தனது நண்பன் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் "டிராகன்" என்ற படத்தில் நடித்து இருந்தார்.


ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து கயாடு லோஹர், அனுபமா, விஜே சித்து, ஹர்ஷத் கான், மிஷ்கின், ஜார்ஜ் மரியான், கே. எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 21 அன்று திரைக்கு வந்தது.வெளியாகி  ஒரு சில நாட்களில் வசூலில் பட்டையை கிளப்பியுள்ளதுடன் உலகம் முழுவதும் ரூ. 150 கோடி வசூலித்துள்ள நிலையில் இத் திரைப்படம் இப்போது ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.


இந்த நிலையில் வரும் மார்ச் 21 ஆம் தேதி "டிராகன்" திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement