• Nov 13 2025

தேவையில்லாம பேசாதீங்க! காதல் திருமணமா! கடுப்பான பாக்கியா மருமகள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் செழியன்-ஜெனி கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ், விகாஷ் சம்பத் நடிக்கிறார்கள்.  இந்த தொடரில் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள். 


இவர்கள் இருவரும் காதலித்து வர நிஜத்தில் இணைய இருக்கிறார்கள் என செய்திகள் வந்தன, விரைவில் திருமண அறிவிப்பு வெளிவரப்போவதாக செய்திகள் வலம் வந்தது. இந்த விடையம் தொடர்பாக நடிகை திவ்யா கணேஷ் தந்து இன்ஸராகிறேம் பக்கத்தில் பதிவொன்றை போட்டுள்ளார். 


அதில் "இந்தக் போஸ்ட்  YouTube சேனல்கள் அல்லது வலைத்தளங்களுக்கானது. விஜய் தொலைக்காட்சியில் பாக்யலட்சுமி சீரியலில் நான் 'ஜென்னி'யாக நடிக்கிறேன் என்பது பலருக்கும் தெரியும். என் சக கலைஞர் திரு.விகாஷ் சம்பத் 'செழியன்' வேடத்தில் நடிக்கிறார். நாங்கள் இருவரும் உறவில் உள்ளோம் என்று கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், எனது கடந்த கால சம்பவங்களையும் குறிப்பிட்டுள்ளனர்.


வெளியிடப்பட்ட அனைத்து கட்டுரைகளும் போலியானவை. எங்கள் இரு குடும்பங்களைப் பற்றியும், இதைப் பற்றிய கேள்விகளைப் பகிர்வதையோ அல்லது எழுப்புவதையோ நிறுத்துமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற விஷயங்களைத் திரும்பத் திரும்பக் குறிப்பிடுவது கவலையளிக்கிறது பகிர்வதையும் நிறுத்துங்கள்" என்று கட்டமாக பதிலளித்துள்ளார். 



Advertisement

Advertisement