பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களுள் ஒரு சிலர் மட்டுமே மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு காணப்படுகின்றனர். அதிகளவானோர் மக்களின் வெறுப்பை சம்பாதித்து வைத்துள்ளனர்.
இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற போட்டியாளர்கள் வெகு குறைவாக காணப்படுகின்றனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் விக்ரம் சாம்ராஜ்யம் மற்றும் பார்வதி சாம்ராஜ்யம் காணப்படுகின்றது.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு 39 வது நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் பேசிய திவாகர் பார்வதியை பார்த்து , மகாராணியே..! தங்களின் அறிவு கூர்மையாலும், ராஜ கம்பீரத்தாலும் எதிரி நாட்டை வீழ்த்தி தர்பீசு சாம்ராஜ்யத்தை நிலைநாட்டி விட்டீர்கள் என்று புகழ்ந்தார்.

மேலும், விக்ரம் டீமை பார்த்து, எதிரி நாட்டு மன்னனை எகத்தாளமாக பார்த்து சிரித்து... என்று அவர்களைப் பார்த்து சிரிக்க, சிரிப்பு எகத்தாளம் என்பதே அவர் பார்த்து சொன்னால் தான் தெரிகிறது என்று விக்ரம் டயலாக் விடுகிறார்.
அந்த நேரத்தில் கானா வினோத், வயிறு வலிக்க சிரிப்பவர்கள் மனித ஜாதி, பிறர் வயிறு எரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி என்று திவாகரை பார்த்து பாடுகின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.
Listen News!