பிக் பாஸ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தை கடந்துள்ளது. இந்த சீசன் ஆரம்பத்தில் வெறுப்பை சம்பதித்து இருந்தாலும், உள்ளே நுழைந்த வைல்ட் கார்ட் போட்டியாளர்களால் ஆட்டம் சூடு பிடித்தது.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 9ல் கலந்து கொண்ட போட்டியாளர்களின் சம்பள விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி போட்டியாளர்களின் சம்பள விபரம் பற்றி விரிவாக பார்ப்போம்.
இந்த சீசனில் கானா வினோத், சுபிக்ஷா, கலையரசன் ஆகிய மூவருக்கும் கம்மியான சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.8 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது.
இவர்களுக்கு அடுத்தபடியாக நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் சம்பளமாக கனி, ஆதிரை, துஷார், எஃப் ஜே ஆகியோர் வாங்கி உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக இன்ஸ்டா பிரபலம் அரோராவுக்கு ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம்.

மேலும் சபரி, பிரவீன் காந்தி, கம்ருதீன், அப்சரா, திவாகர், பிரவீன் ராஜ் ஆகியோருக்கு ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறதாம்.
இதை தொடர்ந்து இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் போட்டியாளராக இருந்தது விஜே பார்வதி தான். அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது.
இதையடுத்து பிரஜன், அமித், திவ்யா கணேஷ், சாண்ட்ரா ஆகியோர் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்களாம் என்ற தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!