சின்னத்திரையிலும், வெள்ளித் திரையிலும் காமெடியில் கலக்கியவர் ரோபோ சங்கர். இவர் மேடைக் கலைஞராக அறிமுகமாகி நாளடைவில் காமெடியிலும், இறுதியாக கதாநாயகனாகவும் களமிறங்கி இருந்தார். எனினும் எதிர்பாராத விதமாக ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரோபோ சங்கரின் மறைவு பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பலரையும் மகிழ்வித்த அவர், இன்னும் உயிரோடு இருந்திருக்கலாம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ரோபோ ஷங்கரின் மறைவு அவருடைய குடும்பத்தினரையும் வெகுவாக பாதித்தது.
எனினும் அவருடைய மறைவிற்குப் பின்னர் அவருடைய மனைவி பிரியங்கா சங்கர் நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். ஆனாலும் அத்தனையும் தாண்டி ரோபோ சங்கர் உயிரோடுதான் இருக்கின்றார். அவர் வெளிநாட்டில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கின்றார் என்று மனதை தேற்றிக்கொண்டு தங்களுடைய வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் அர்ச்சனாவுடன் இணைந்து புதிதாக சமையல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தார் பிரியங்கா சங்கர். இதற்கும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவர் தன்னுடைய வேதனைகளை கடந்து அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதை நினைத்து பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் பிரியங்கா சங்கர் தன்னுடைய பிறந்தநாளை விஜய் டிவி சீரியல் தனம் பிரபலங்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதன் போது தனம் சீரியல் பிரபலங்கள் மட்டும் இன்றி அவருடைய மகள், பேரன், மருமகன் ஆகியோரும் காணப்பட்டுள்ளனர். அத்துடன் இது ரோபோ சங்கர் மறைந்த பிறகு கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் என்று இந்திரஜா பதிவிட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!