சமீபத்தில் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று, நடிகை கெளரி கிஷனின் எடை தொடர்பான கேள்வி. ஒரு பத்திரிகையாளர் நேர்காணலின் போது, கெளரி கிஷனிடம் எடை குறித்த கேள்வி எழுப்பப்பட்டு அது சர்ச்சையாக பரவி, சமூக வலைத்தளங்களில் கடும் விவாதங்களுக்கு ஆளானது. சமூக ஊடகங்களில் சிலர் பத்திரிகையாளரை விமர்சித்திருப்பதோடு, சிலர் நடிகையின் தனிப்பட்ட உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த சர்ச்சைத் தொடரின் நடுவே, தமிழ் திரைப்பட உலகின் பிரபல பாடலாசிரியர் ஜேம்ஸ் வசந்தன், தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, "எடை பற்றிக் கேட்டதில் என்ன தவறு? அவர்கள் படத்தில் எப்படி வேண்டும் என்றாலும் உடை அணிவார்கள்… நாம் அணியக்கூடாது என்று சொன்னால் அவர்களுக்கு பிடிக்காது தானே… அப்படி தன்னுடைய சேனல் பாப்புலாரிட்டிக்காக அப்புடி தான் கேள்வி கேட்பேன் என்று சொல்வதையும் தவறாக பார்க்க முடியாது தானே. எனக்கு தப்பாத் தெரியல..." என்று தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் வசந்தனின் கருத்து, திரையுலகத்தில் பலருக்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் தங்களது பாணியிலும் உடல் அமைப்பிலும் தனித்துவம் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம், ரசிகர்கள் மற்றும் சமூக ஊடகக் கண்காணிப்பாளர்கள் தொடர்ந்து அவர்களது தனிப்பட்ட விவரங்களை ஆராய்வது வழக்கமாக உள்ளது. இந்த சூழ்நிலையை ஜேம்ஸ் வசந்தன் தனது பார்வையுடன் விளக்கியுள்ளார்.
Listen News!