• Nov 13 2025

நடிகர் அஜித்தின் புதிய முயற்சி... இன்ஸ்டாவில் வைரலான புகைப்படங்கள்.!

subiththira / 18 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரைப்பட உலகின் பிரபல நடிகர் அஜித் குமார் தற்போது திரை உலகத்திற்கு மட்டுமன்றி, கார் ரேஸ் உலகிலும் தனது பெயரை நிறுவி வருகிறார். சமீபத்தில், அவர் தலைமையில் செயல்படும் அஜித் குமார் ரேஸிங் அணி ஆசியா லீ மேன்ஸ் (Asian Le Mans Series) கார் பந்தயத்தில் பங்கேற்க தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியதும், ரசிகர்கள் மற்றும் கார் ரேஸிங் ஆர்வலர்கள் இடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆசியா லீ மேன்ஸ் என்பது உலகப் புகழ்பெற்ற கார் பந்தய தொடராகும். அதற்கு அஜித் குமார் ரேஸிங் அணி தற்போது தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 


அஜித் குமார் ரேஸிங் அணி பயிற்சி செய்து வந்ததற்கான தகவல்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் மிக விரைவாக வைரலாகி வருகிறது. ரசிகர்கள், “அஜித் குமார் படத்தில் மட்டுமல்ல, ரேஸிங்கிலும் நமக்கு பெருமை சேர்க்கிறார்” என்று பெருமிதத்துடன் பகிர்ந்து வருகின்றனர். மேலும், அஜித்தின் இந்த முயற்சி இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிற்கு புதிய ஒளியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement