எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ஆதி குணசேகரன் சக்தியின் கதையை முடிக்க ஆள் அனுப்பியிருந்த நிலையில், அவர்களிடமிருந்து சக்தி தப்பிச்சு செல்கின்றார். மேலும் அவர் கண்ணதாசனை சந்தித்து, தேவகி பற்றிய ரகசியங்களை தெரிந்து கொள்கின்றார்.
மேலும் தேவகியை ஆதித்தான் கொன்றார் என்ற உண்மையையும் சக்திக்கு தெரிய வருகிறது. அத்துடன் ஆதி குணசேகரிடம் இருந்து தப்பிய ராணா எங்கு இருக்கின்றார் என்ற உண்மையை சொல்ல முடியாதென கண்ணதாசன் கூறுகின்றார். இதனால் சக்தி ஊருக்கே கிளம்புகின்றார்.
இந்த நிலையில், இன்றைய தினம் வெளியான எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். அதில் அன்புக்கரசி மீண்டும் வீட்டுக்கு வருகின்றார். அவரை வீட்டு வாசலிலே தர்ஷினி தடுத்து நிறுத்துகின்றார். மேலும் உனக்கு பைனல் வார்னிங் கொடுக்கின்றேன். இங்கே இருந்து ஓடிடு.. இல்லனா பெரிய பிரச்சனை ஆகிடும் என்று சொல்லுகின்றார்.

அதற்கு அன்புக்கரசி, பிரச்சனையை நீ இனிமேதான் பண்ணுவேன்னு சொல்ற.. ஆனால் நான் பிறந்ததிலிருந்து பிரச்சனையோட தான் வாழ்ந்துட்டு இருக்கின்றேன் என்று பதிலடி கொடுக்கின்றார். மேலும் பயந்து எல்லாம் என்னால ஓட முடியாது.. உன்னால முடிஞ்சத பார்த்துக்கொள் என்று சொல்லுகின்றார்.
அதன் பின்பு ஜனனி, அன்புபை பார்த்து முறைக்கின்றார். அதற்கு, இப்படியே பார்த்து முறைச்சுட்டு நிற்காமல் வேறு ஏதாவது பண்ண பாருங்க ஒர்க் அவுட் ஆகுதான்னு பார்ப்போம் என்று சவால் விட்டு செல்கின்றார் அன்பு.
இன்னொரு பக்கம், ஆதிக்கு வந்த போன் காலில் ராமேஸ்வரத்தில் இருந்து பேசிய அவரின் அடியாள், ஒரு சின்ன பிரச்சினை ஆகிவிட்டது.. சக்தி நம்ம ஆளுங்களை அடித்து விரட்டிட்டு தப்பிச்சு போயிட்டான் என்று சொல்லுகின்றார். இதை கேட்டு ஆதி குணசேகரன் டென்ஷன் ஆகின்றார்.
மேலும் அவருக்கு திட்டிவிட்டு, நீ என்ன பண்ணுவியோ தெரியாது அவன புடிச்சி, அவன் கையில என்ன இருக்கோ அத்தனையும் புடிங்கிட்டு அவன அடிச்சு விரட்டி விடு என்று உத்தரவிடுகின்றார். அதன்படி அந்த ரவுடி இந்த ராமேஸ்வரத்தை விட்டு அவனை தாண்ட விடமாட்டேன் என்று கூறுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!