துல்கர் சல்மான், ரானா டகுபதி, சமுத்திரகனி உள்ளிட்டோரின் நடிப்பில் எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர உள்ள திரைப்படம் தான் காந்தா. இந்த படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
குறித்த விழாவில் சமுத்திரக்கனி பேசும் போது, என்னுடைய சினிமா பயணத்தை காந்தா படத்திற்கும் முன், பின் என பிரிக்கலாம். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டிற்கு முன்பு எனக்கு காய்ச்சல் வருவது போல் இருந்தது. சில படங்கள் அப்படியான மேஜிக் செய்யும். காலத்தால் அழிக்க முடியாத இது போன்ற படங்களில் நான் நடிப்பது பெருமை என்றார்.
இந்த நிலையில், ஆண் பெண்ணை விட சிறந்த தாய் என நடிகர் சமுத்திரக்கனி கூறியதும் வைரலாகி உள்ளது.

அதில் அவர் கூறுகையில், ஒரு பெண் கூட பல விஷயத்தில் வெடித்து விடுவார்கள். எல்லாத்தையும் வெளியே சொல்லி காமிச்சிடுவாங்க. ஆனா எதையும் வெளியே சொல்லிக்க முடியாமல், எல்லா பிரச்சினையையும் சுமக்கின்றவன் தான் ஆண்.
ஒரு புள்ள ஏதாவது கேட்டு அதை வாங்கி கொடுக்க முடியாமல் எத்தனையோ தகப்பன் வலியோட தவித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
Listen News!