• Nov 13 2025

வெளியானது "பராசக்தி" படத்தின் சுவாரஸ்யமான அப்டேட்.. என்ன தெரியுமா.?

subiththira / 16 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்கள், உணர்ச்சியை நுணுக்கமாக வெளிப்படுத்தும் திறமை என்பன மூலம் ரசிகர்களின் இதயத்தில் தனி இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் சுதா கொங்கரா. தற்போது அவர் இயக்கி வரும் ‘பராசக்தி’ எனும் மாபெரும் திரைப்படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.


சமீபத்திய அப்டேட் என்னவென்றால், இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் மற்றும் பாடகர் யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் பாடியுள்ளார் என்று உறுதிப்படுத்தியுள்ளார். 

இது ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்பிறைஸ். ஏனெனில், இரண்டு பிரபல இசை கலைஞர்களின் இணைப்பு என்பது அரிதான ஒன்று. அது தற்பொழுது பராசக்தி படத்தில் நிகழ்ந்துள்ளது. அத்துடன், ஜி.வி. பிரகாஷ் மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். 


அந்தப் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் இது குறித்து உற்சாகமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement