தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் அழகிய நடிகைகளில் ஒருவரான விஜயசாந்தி, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை திறமையாக பகிர்ந்திருந்தார். அந்த உரை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏனெனில் நடிகை கூறிய பணமும், வெற்றியும் வாழ்க்கை சந்தோஷத்தின் அடையாளம் அல்ல என்ற கருத்துகள் பலருக்கும் பெரும் சிந்தனையை ஏற்படுத்துகின்றன.

நடிகை கூறியதாவது, “வாழ்க்கையில் அடுத்த நொடி என்ன நடக்கும்னு நமக்குத் தெரியாது. இருக்கிற வரை சந்தோசமா இருங்க. இருக்கிற வருமானத்தை வச்சி உங்க சந்தோசத்தை நீங்களே உருவாக்கிக்கோங்க.... உலகத்தில எல்லாரும் பணக்காரனா இருக்க முடியுமா.? பணம் இருக்கிறவங்க கிட்ட மட்டும் நிம்மதி இருக்கும்னு நினைக்கிறீங்களா.?
அவன் அந்தப் பணத்தை எப்படி டபுள் மடங்கு பண்ணனும்... இருக்கிறத ஒழுங்கா காப்பாத்த முடியுமான்னு நிம்மதி இல்லாமல் தான் இருப்பான். யாருக்கும் கெடுதல் பண்ணாமல் இருக்கிறத வைச்சு சந்தோசமா நிம்மதியா வாழுங்க.." என்றார்.

இது நடிகை விஜயசாந்தியின் வாழ்வுத் தத்துவங்களில் ஒன்றாகும். இவர் திரைப்படங்களிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் மனதைப் பிரதிபலிக்கும் நடிப்பு மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு மூலம் ரசிகர்களை ஈர்த்தவர். ஆனால், இம்முறை அவர் உண்மையான வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார், அது ரசிகர்களுக்கு தனிப்பட்ட வகையில் உற்சாகமும் சிந்தனையும் அளித்துள்ளது.
Listen News!