எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராமேஸ்வரத்தில் உள்ள தன்னுடைய ஆட்களுக்கு போன் போட்டு என்ன நடந்தது என்று ஆதி கேட்க, அதற்கு சக்தி தங்களிடமிருந்து எஸ்கேப் ஆனதாக ரௌடிகள் கூறுகின்றார்கள்.
இதனால் கோபப்பட்ட ஆதி குணசேகன், நீ என்ன பண்ணுவியோ தெரியாது, அவனை பிடித்து அவனிடம் இருக்கும் ஆதாரங்களை வாங்கிட்டு அவனை விரட்டி விடு என்று சொல்கின்றார்.
இன்னொரு பக்கம் அண்ணன் வீட்டுக்கு சென்ற விசாலாட்சி, மீண்டும் வீட்டுக்கு திரும்புகின்றார். அவருடன் தம்பி சாமியாடியோடு வீட்டுக்கு வருகிறார். அதன் பின்பு வீட்டிற்கு வந்த விசாலாட்சி, தன் மருமகள்களோடு கரராக பேசுகின்றார்.

இதன் போது சாமியாடியோடு வந்த சிஷ்யனுக்கு திடீர் என்று சாமி வந்து, உங்க குடும்பத்துல ஒரு பெரிய உசுரு போகப்போகுது என்று சொல்ல. அனைவரும் அதிர்ச்சி அடைகின்றார்கள். இதனால் சக்திக்கு ஏதாவது ஆகி விடுமோ என அனைவரும் பதறுகின்றனர்.
அந்த நேரத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பிய சக்தியை ஒரு ரௌடி கும்பல் சுற்றி வளைக்கின்றது. அவரின் முகத்தில் மயக்க மருந்து அடித்து அவரை கடத்திச் செல்கின்றார்கள். எனினும் ஆதி குணசேகரன், தன்னுடைய ஆட்களிடம் சக்தியை அடித்து ஆதாரங்களை வாங்கி வரச் சொல்லித்தான் அனுப்பி இருந்தார்.
ஆனால் தற்போது அவரை கடத்திய ரௌடிகள் சக்தி மீது கை வைக்க இல்லை. இதனால் அது ராணா அனுப்பி வைத்த ஆட்களாக கூட இருக்கலாம். ஆதி குணசேகரனால் சக்திக்கு ஆபத்து இருக்கின்றது என்பதை அறிந்து, ராணா அவரை காப்பாற்றி இருக்கலாம். அடுத்து என்ன நடக்கின்றது என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்ப்போம்.
Listen News!