சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், பாட்டி வீட்டிற்கு சென்ற விஜயா அங்கு நடனமாடி என்ஜாய் பண்ணுகின்றார். அவருடன் இணைந்து ரவி, ஸ்ருதி, ரோகிணி, முத்து, மனோஜ் ஆகியோர் நடனமாடி மகிழ்ச்சியாக காணப்படுகின்றார்கள். ஆனால் மீனா மட்டும் மந்திரவாதி சொன்ன விஷயத்தை நினைத்து கவலையாக காணப்படுகின்றார்.
அந்த நேரத்தில் முத்து மந்திரவாதி சொன்ன விஷயத்தை பாட்டியிடம் சொல்ல, அவர் சில நேரங்களில் சொன்னவை உண்மையாக நடந்துள்ளது. நாங்கள் நாளைக்கு குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பிக்கை கொடுக்கின்றார்.
இதை தொடர்ந்து பாட்டியின் வீட்டிற்கு இரவில் வந்த மந்திரவாதி, இளநீர் கோப்பையால் அவர்களுடைய கதவிற்கு அடிக்கின்றார். இதனால் வெளியே வந்தவர்கள், அவருக்கு மனநலம் சரியில்லை என்று கூறுகின்றார்கள். ஆனால் அவர் மனோஜ், விஜயாவை பார்த்து சிரிக்கின்றார். அண்ணாமலையை பார்த்து அழுகின்றார். ரோகினியை பார்த்து முறைக்கின்றார்.

மேலும் முத்துவிடம் மீனாவை ஊருக்கே கூட்டிச் செல்லுமாறு எச்சரிக்கின்றார். இதனால் எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றார்கள். மறுநாள் அனைவரும் தீபாவளி கொண்டாடுவதற்கு பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக காணப்படுகின்றார்கள்.
அந்த நேரத்தில் ரோகிணியின் அம்மா அவருக்கு கால் பண்ணி திதி செய்ய வருமாறு அழைக்கின்றார். மேலும் அவர்கள் பிளான் போட்ட கோவிலில் ஒருவர் பிறந்ததால் அந்த கோவிலில் திதி செய்ய முடியாது வேறு ஒரு கோயிலில் தான் திதி செய்ய வேண்டும் என்று ஐயர் சொல்லுகின்றார். இதனால் மந்திரவாதி எல்லாமே தானா நடக்கல உங்கள இழுத்துட்டு போகுது என்று எச்சரிக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட் .
Listen News!