தென்னிந்திய சினிமா உலகத்திலும், அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ரவிகுமார், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகைகள் சாக்ஷி அகர்வால், ப்ரியா பவானி சங்கர், மற்றும் ஹெச். ராஜா, அவரது மகள் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக தற்போது சென்னை பொலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல்களின் படி, இன்று காலை சில முக்கிய பிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், இது தொடர்பாக பொலிஸார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது முதல் தடவையல்ல. சமீபகாலமாக தமிழ்நாட்டில் உள்ள பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் பிரபல நடிகர்களுக்கு எதிராக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பும் நடிகர் விஜய், மற்றும் சில அரசியல்வாதிகளின் வீடுகளுக்கும் இதேபோன்ற மிரட்டல்கள் வந்திருந்தன. பின்னர் அவை பொய்யான அழைப்புகள் என நிரூபிக்கப்பட்டது.
ஆனால் ஒவ்வொரு முறையும் பொலிஸார் அதனை மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. இத்தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதும் பலரும் “எந்த காரணத்திற்காக இவ்வாறு மிரட்டல் விடுக்கப்படுகிறது?”, “பொலிஸார் குற்றவாளிகளை உடனே பிடிக்க வேண்டும்” என தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!