தென்னிந்திய சினிமா உலகில் தற்போது நடிகர் துல்கர் சல்மான்- அஜித் குமார் பற்றிய மனம் கவரும் வகையில் கூறிய கருத்துகள் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் வெளியான ஒரு பேட்டியில் துல்கர், தன்னுடைய வாழ்க்கையில் அஜித் குமார் மிகப்பெரிய Inspiration என தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்த வயதிலும் ரேசிங் கனவை பின்தொடர்ந்து, தனக்குப் பிடித்த விஷயத்தை செய்கிறார் என்ற காரணத்தால் தான் அவரை மிகவும் மதிக்கிறேன் என கூறியுள்ளார்.

துல்கர் சல்மான் தெரிவித்ததாவது, “நடிகர் அஜித் குமார் எனக்கு மிகப்பெரிய inspiration. அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கும் ஒரு எடுத்துக்காட்டு. இந்த வயதிலும் அவர் தனது கனவை பின்தொடர்கிறார். அது ரேசிங், சினிமா அல்லது எந்த விஷயம் ஆனாலும், அவர் சிறப்பாக மேற்கொள்வார். அந்த dedication எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அப்படிப்பட்ட வாழ்க்கை முறை வாழ விரும்புகிறேன்.” என்றார்.
இந்த பேட்டி வெளிவந்த சில மணி நேரங்களிலேயே, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் துல்கர் கூறிய வார்த்தைகளை வைரலாக்கி வருகின்றனர். #AjithKumar #DulquerSalmaan என்ற ஹாஷ்டாக்குகள் தற்பொழுது டிரெண்டாகி வருகின்றன.

துல்கர் சல்மான் மலையாள சினிமாவிலிருந்து வந்தவர் என்றாலும், தமிழ் ரசிகர்களிடையே பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். அவர் தற்பொழுது அஜித் பற்றி கூறிய கருத்துகள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
அஜித் குமார் என்ற பெயர் எப்போதுமே தன்னம்பிக்கை என்பதற்கான சின்னமாக இருக்கிறது. அவரது ரேஸிங் ஆர்வம் மற்றும் தன்னம்பிக்கை நிறைந்த வாழ்க்கை முறை பலருக்கும் ஒரு motivation story ஆக திகழ்கிறது.
Listen News!