தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக தமன்னா வலம் வருகின்றார். பல வருடங்களாக இவர் தனக்கான இடத்தை சினிமா துறையில் தக்க வைத்துள்ளார். எனினும் சமீபத்தில் தமன்னாவின் உடல் மாற்றத்தால் ஒரு சில சர்ச்சைகளிலும் சிக்கினார்.
இந்த நிலையில், தமன்னா ஒசிம்பிக் என்ற மருந்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பில் தமன்னா அளித்த பேட்டியில், 15 வயது முதல் நான் கேமரா முன்பு நிற்கின்றேன். கேமராவுக்கு முன்னால் நான் வளர்ந்ததை மக்கள் பார்த்திருக்கிறார்கள். அதனால் மறைக்க எதுவும் இல்லை.
எனது இருபது வயதில் இறுதிவரை நான் ஒல்லியாக தான் இருந்தேன். இப்போதும் எனது உடல் நுட்ப ரீதியாக புதிதல்ல. நான் இப்படித்தான் வளர்ந்தேன், இப்படித்தான் இருந்தேன். இருப்பினும் கொரோனா காலத்தில் ரசிகர்கள் என்னைப் பற்றி ஒரு விம்பத்தை உருவாக்கினார். இந்தி ரசிகர்களுக்கு இது புதிதாக இருக்கலாம்.
ஆனால் நான் 100 படங்களை நெருங்குகிறேன். பலவிதமான படங்களிலும், பலவிதமான உடல் அமைப்புகளிலும் நான் தோற்றம் அளிக்கின்றேன். ஒரு பெண்ணின் உடல் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கின்றது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கொரோனா காலத்தில் எனது உடல் எடையை தக்க வைத்துக் கொள்வது கடினமாக இருந்தது. நான் அதற்காக போராடினேன். குறிப்பிட்ட உடல் அளவில் இருக்க வேண்டும் என்பதால் நான் மிகவும் கவனமாக இருக்க விரும்பவில்லை என்று உணர ஆரம்பித்தேன். அதனை திருத்த முயற்சித்தேன்.
அப்போதுதான் எனது வயிறு வெளியே வந்தது. அதை உணர்ந்துதான் என்ன நடக்குது என்று யோசித்தேன். மாதவிடாய் சுழற்சிக்கு உள்ளாகும் எந்த பெண்ணும் தனது உடல் மாறுவதை உணர்கின்றாள். நானும் எனது 30 களின் ஆரம்பத்தில் அனுபவித்தேன் என்றார்.
Listen News!