• Nov 13 2025

திரையுலக பிரச்சனையை தீர்க்காமல் அரசியலுக்கு வரலாமா? விஜய்யை குறிவைக்கும் சேரன்.!

subiththira / 15 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமூக பொறுப்புணர்வுடன் பேசும் நடிகர்களில் ஒருவராக அறியப்படுபவர் சேரன். இயக்குநராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள அவர், சமீபத்தில் தளபதி விஜய் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.


அவரின் இந்தக் கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக, விஜய் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய நிலையில், சேரனின் இந்த கருத்துகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

சமீபத்திய பேட்டியில் சேரன் கூறியதாவது, “திரையுலகத்திலிருந்து அரசியல் வாழ்க்கைக்கு வர்றவங்க திரையுலகத்துல தீர்க்க வேண்டிய பிரச்சனை நிறைய இருக்கு... முதல்ல அந்தப் பிரச்சனைக்கு தீர்வு பண்ணா தானே, நீங்க நாட்டுக்கே சரியான தீர்வு எடுக்க முடியும்னு நான் ஒத்துக்க முடியும்.


நீங்க அதைக் கண்டுக்கவே மாட்டீங்க... உங்க படம் ரிலீஸ் ஆனா போதும், கோடிகளில் வசூலானா போதும்... மத்தவங்க படத்தைப் பற்றி கவலைப்பட மாட்டீங்கன்னா, அதை நான் சுயநலமாக தான் பார்க்கிறேன்.” என்றார். சேரனின் இந்த வார்த்தைகள் நேரடியாக விஜய்யை குறிக்கும் வகையில் அமைந்துள்ளன என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.


Advertisement

Advertisement