• Nov 12 2025

“ப்ரோ கோட்” தலைப்பு வழக்கில் எதிர்பாராத திருப்பம்... உயர் நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

திரைப்பட உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய “ப்ரோ கோட்” தலைப்பு வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. இயக்குநர் ரவி மோகன் தனது புதிய திரைப்படத்திற்காக “ப்ரோ கோட்” என்ற பெயரை பயன்படுத்த முயற்சித்த நிலையில், அதே பெயரில் மதுபானம் விற்பனை செய்யும் இண்டோ-ஸ்பிரிட்-பிவரேஜஸ் (Indo-Spirit Beverages) நிறுவனம் இதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது.


சினிமா மற்றும் வணிகம் இடையே பெயர் தொடர்பான உரிமை என்பது புதிய ஒன்றல்ல. இதுபோன்ற ஒரு பிரச்சனை தான் தற்போது “ப்ரோ கோட்” தலைப்பைச் சூழ்ந்துள்ளது.

இண்டோ-ஸ்பிரிட்-பிவரேஜஸ் நிறுவனம் இந்திய சந்தையில் “PRO CODE” என்ற பெயரில் பிரபலமான மதுபான விற்பனையை செய்து வருகிறது. 


இந்நிலையில், இயக்குநர் ரவி மோகன் தனது புதிய படத்திற்கும் அதே “ப்ரோ கோட்” என்ற பெயரையே தேர்வு செய்திருந்தார். அந்தப் பெயரைப் பயன்படுத்துவது வணிக ரீதியாகவும், நுகர்வோர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாக இண்டோ-ஸ்பிரிட் நிறுவனம் தெரிவித்தது. இதனால், அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இதுகுறித்து ரவிமோகன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இடைக்கால தடையை நீக்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிபதி தற்பொழுது இடைக்கால தடையை நீக்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement