• Nov 13 2025

ப்ளீஸ் அசிங்கமா பேசாதீங்க மீனா.. ரோகிணி எடுத்த விபரீத முடிவு? க்ரிஷ் செய்த காரியம்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் , ரோகிணி அப்பாவுக்கு திதி கொடுக்க,  எல்லாம் ஆயத்தமாக இருந்த நிலையில் அவருடைய அம்மா ரோகிணிக்கு கால் பண்ணி  வேறு ஒரு கோயிலுக்கு வந்ததாகவும், அந்த கோயிலுக்கு வருமாறும் கூறுகின்றார். 

இதன் போது எந்த கோயில் என்று கேட்ட ரோகிணி,  நானும் அதே கோயிலில் தான் இருக்கின்றேன். என்னுடைய மொத்த குடும்பமும்  இங்கே தான் இருக்கின்றது. நான் எப்படி வர முடியும் என்று  மறுக்கின்றார். ஆனாலும் ஒரு பத்து நிமிஷம் வந்து விட்டுப் போ என்று அவருடைய அம்மா கெஞ்சுகின்றார். 

இதனால் ரோகிணியும் மனோஜிடம் வயிறு சரியில்லை என்று சொல்லிவிட்டு  செல்கின்றார். பின்பு ரோகிணி அவருடைய குடும்பத்தினருடன் இருந்து திதி கொடுத்துக் கொண்டிருக்கும் போது அங்கு தண்ணீர் எடுப்பதற்காக மீனா வருகின்றார். 


மேலும்,  ரோகிணி அம்மா இதுதான் என்னுடைய  பிள்ளை, எனக்கு ஒரு பிள்ளை தான். இது என்னுடைய பேரன் என்று  சொன்னதைக் கண்டு மீனா அதிர்ச்சி அடைகின்றார் .  அதன் பின்பு எல்லோரும் மீனாவை பார்த்து அதிர்ச்சி அடைகின்றார்கள். 

எனினும் ரோகிணி இவர்களும் இங்கு வந்து இருக்காங்க என்று மீண்டும் பொய் சொல்ல ஆரம்பிக்கின்றார்.  அதை கேட்டு  ரோகிணிக்கு பளார் என்று அறைகிறார் மீனா.  மேலும் இதனை வீட்டில் சொல்வேன் என்று சொல்ல,  ரோகிணி அவருடைய காலில் விழுந்து கெஞ்சுகின்றார்.

மேலும் அவருடைய அம்மாவிற்கும் கண்டபடி பேசுகின்றார் மீனா.  இறுதியில் இதனை வீட்டில் சொல்லத் தான் போகிறேன் என்று மீனா சொல்ல,  நான் உண்மையாகவே உயிருடன் இருக்க மாட்டேன் என்று  ரோகிணி பயமுறுத்துகிறார்.  இதனை சொல்ல வேண்டாம் என்று க்ரிஷும் அவருடைய பாட்டியும் கெஞ்சுகின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட் .




 

Advertisement

Advertisement