• Nov 13 2025

விஜய் தேவரகொண்டா பற்றி உருக்கமாகப் பேசிய ராஷ்மிகா... இணையத்தைக் கலக்கிய வீடியோ.!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே எப்போதும் பேசப்படும் ஜோடியாக விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா விளங்குகின்றனர். 


கடந்த சில வருடங்களாகவே இவர்கள் இருவருக்குமிடையில் காதல் கிசுகிசுக்கள் வெளியாகி கொண்டிருந்தன. எந்த ஒரு பொதுவான நிகழ்ச்சியிலும் இருவரும் சேர்ந்து வராமல் இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் வரும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பேட்டிகள் ரசிகர்களுக்கு “ஏதோ ஒன்று உள்ளது!” என்ற எண்ணத்தை எப்போதும் ஏற்படுத்தி வந்தன.

சமீபத்தில் இந்த கிசுகிசுக்களுக்கு புதிய திருப்பமாக, இருவரும் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும், இவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் எனவும் செய்திகள் வெளிவந்தன. இதை உறுதி செய்யும் வகையில் ராஷ்மிகா மந்தனா பேட்டியில் விஜய் தேவரகொண்டா குறித்து மென்மையான பாச வார்த்தைகளை பகிர்ந்திருந்தார்.


இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தி கேர்ள் பிரண்ட்’ திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றி விழா சமீபத்தில் வெகு விமர்சையாக நடந்தது.

அந்த நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். ஆனால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது விஜய் தேவரகொண்டாவின் வருகை.

விழாவின் போது ராஷ்மிகா, “ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் விஜய் தேவரகொண்டா இருந்தால் அது ஒரு ஆசீர்வாதம்!” எனத் தெரிவித்திருந்தார். 

அவர் கூறியதும் நிகழ்ச்சியில் பெரும் கைத்தட்டல்கள் ஒலித்தன. விஜய் தேவரகொண்டா புன்னகையுடன் ராஷ்மிகாவைப் பார்த்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது மில்லியன் கணக்கான பார்வையாளர்களைப் பெற்று வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement