விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதன் பின்பு பிக் பாஸ் எட்டாவது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.
இதற்கிடையில், பிக் பாஸ் நிகழ்ச்சி கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் காணப்படுவதாக, இந்த நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி எதிர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் விஜய் சேதுபதியை தாக்கி பேசியதோடு அவருடைய புகைப்படங்களை காலணிகளைக் கொண்டு அடித்த காட்சியும் வைரலானது.
இந்த நிலையில், பிக் பாஸ் 9வது சீசன் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தை கடந்த நிலையில் இறுதியாக வெளியான வோட்டிங் லிஸ்ட் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சுபிக்ஷா மக்கள் வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்று இறுதியாக காணப்படுகின்றார்.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேறி வரும் நிலையில், கடந்த வாரம் இரண்டு ஏவிக்சன் நடைபெற்றது. அதில் துஷாரும் பிரவீனும் வெளியேறி இருந்தார்கள். அதில் பிரவீனின் வெளியேற்றத்தை பலராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை .
இவ்வாறான நிலையில் தற்போது வெளியான பிக் பாஸ் வோட்டிங் லிஸ்டில், சுபிக்ஷா மிகவும் குறைவான வாக்குகளை பெற்று இறுதியில் காணப்படுகின்றார். அதற்கு அடுத்தபடியில் ரம்யா, கனி, அரோரா ஆகியோரும், வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் வந்த சாண்ட்ரா, திவ்யா ஆகியோர் முன்னிலையில் வகிக்கின்றனர்.
எனவே இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்ற சுபிக்ஷா மற்றும் ரம்யா, கனி, அரோரா ஆகியோரில் யார் வெளியேறப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!