• Nov 13 2025

“டயங்கரம்” பட வெற்றிக்காக கோவிலில் பிரார்த்தனை செய்யும் VJ சித்து.. வைரலான போட்டோஸ்.!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரைப்பட உலகில் பல கலைஞர்கள், சாதனை படைக்கும் முன்னேற்றங்களை தங்களது கடவுளுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் தொடங்குகிறார்கள். இந்நிலையில், பிரபல VJ மற்றும் நடிகர் சித்து தனது முதல் படமான "டயங்கரம்" படத்தின் வெற்றிக்காக கடவுளை பிரார்த்தனை செய்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும், பேச்சுவார்த்தையையும் ஏற்படுத்தியுள்ளது.


சித்து சமீபத்தில் தனது கடவுள் பக்தி குறித்து சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். அதன்போது, “நான் எப்போதும் பாம்பன் சுவாமிகள் கோவில் சென்றுவிடுவேன். ஏன் என்றால் இந்தக் கோவில் ரொம்ப சக்தி வாய்ந்தது. 

அங்க ஒவ்வொரு முறை போய்ட்டு வரும்போதும் பழனிக்கு போய்ட்டு வந்தால் எப்படி ஒரு மாற்றம் ஏற்படுமோ அப்படி ஒரு மாற்றம் நடக்கும்,” எனவும், தன்னுடைய மனம் திறந்து கூறியிருந்தார். அவர் இதைச் சொல்லும் போது, தனது வாழ்க்கை மற்றும் படைப்பு முயற்சிகளில் பக்தி மற்றும் நம்பிக்கை எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தினார். 


அத்துடன், அந்தக் கோவிலில் சித்து தனது முதல் படமான "டயங்கரம் " படத்தின் ஸ்கிரிப்டை வைத்து கோவிலில் வணங்கியதும், அந்தப் பக்தியை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பாராட்டியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன. 

Advertisement

Advertisement