• Nov 13 2025

ரஜினி – கமல் இணைப்பிலிருந்து விலகிய சுந்தர்.சி.... மனமுடைந்த ரசிகர்கள்.! காரணம் இதுதானா.?

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஒரு செய்தி, தற்போது ஒரு அதிர்ச்சி திருப்பத்தைப் பெற்றுள்ளது.

சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன் இணையும் ஒரு புதிய திரைப்படம் பற்றிய தகவல்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.


அந்த படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்குவார் எனவும், படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இது இரு பெரும் லெஜண்ட்ஸின் இணைப்பு என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஆனால் தற்போது அந்த திட்டத்தில் இருந்து இயக்குநர் சுந்தர்.சி விலகியுள்ளார் என்ற செய்தி, தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவரும் தமிழ் சினிமாவின் தூண்களாக விளங்குகிறார்கள். 80களில் இருவரும் இணைந்து நடித்த படங்கள் ரசிகர்களுக்கு பெரும் யுகத்தை நினைவூட்டுகின்றன.

அதன்பின் இருவரும் தனித்தனி பாதைகளில் சென்று உலகளாவிய ரீதியில் புகழ் பெற்றனர். அதனால் தான், “கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம்” என்ற செய்தி வெளிவந்தவுடன், சமூக வலைத்தளங்களில் #Kamal Rajini Combo என்ற ஹாஷ்டாக் டிரெண்டாகி, ரசிகர்கள் குஷியில் மிதந்தனர்.


சுந்தர்.சி தமிழ் சினிமாவில் காமெடி, மாஸ், மற்றும் வசூல் வெற்றி என்பவற்றுக்கான உறுதிகரமான பெயராக திகழ்கிறார். அதனால் தான், சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்ற தகவல் வெளியானபோது, இது ஒரு பெரிய கமர்ஷியல் என்டர்டெய்னர் ஆக இருக்கும் என ரசிகர்கள் உறுதியுடன் நம்பினர்.

இந்நிலையில், இயக்குநர் சுந்தர்.சி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், “சில தவிர்க்க முடியாத காரணங்களால், கனத்த இதயத்துடன் ரஜினி–கமல் திட்டத்திலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளார். இத்தகவல் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement