விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி ஒரு மாதத்தை கடந்துள்ளது. இந்த முறையும் இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகின்றார். கடந்த வாரம் இறுதியாக பிக் பாஸ் வீட்டில் இரண்டு பேர் எலிமினேட் ஆகி வெளியே சென்றுள்ளனர்.
துஷார் திறமை இருந்தும் அதை வெளிக்காட்டாமல் அரோராவுடன் சுற்றி, தன்னுடைய நேரத்தை வீணடித்ததால் மக்களின் வாக்குகள் அடிப்படையில் அவர் வெளியேற்றப்பட்டார். ஆனால் பிரவீன் தன்னுடைய ஒவ்வொரு டாஸ்கையும் நேர்த்தியாக விளையாடினார். அவருடைய வெளியேற்றம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என பிக் பாஸ் ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 38 வது நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் பிக் பாஸ் சாம்ராஜ்யத்தில் உள்ள தலைமை அதிகாரிகளை மாற்றம் செய்கின்றார்.

அதன்படி கானா சாம்ராஜ்யத்திற்கு விக்ரமை ராஜா ஆக்குகின்றார் பிக் பாஸ். அதேபோல தர்பீஸ் சாம்ராஜ்யத்திற்கு பார்வதி மகாராணி ஆகின்றார். அவர்கள் இருவருக்கும் அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டு அரச கதிரையில் அமருகின்றனர்.
இதன் போது திவாகர், தர்பீஸ் அரச சபையில் சதி நடக்கின்றது. எதிரிகளின் படையை சுக்கு நூறாக உடைத்தெறியும் வல்லமை படைத்த எங்கள் கண்ணழகி என பார்வதியை புகழுகின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.
Listen News!