பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரில்டாவை திருமணம் செய்த விவகாரம் நீதிமன்றத்தில் மேலும் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ரங்கராஜ் தாக்கல் செய்த அவதூறு வழக்கு தற்போது ஜாய் கிரில்டாவுக்கு எதிராக திரும்பி உள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் தன்னை பற்றி சோசியல் மீடியாவில் அவதூறு பரப்புவதை தடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது ஜாய் கிரில்டாவுக்கு 2024 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி தான் விவாகரத்து கிடைத்துள்ளது.
ஆனால் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் 2023 டிசம்பர் 24 ஆம் தேதி இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது என்று ஜாய் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதை பற்றி விசாரித்த நீதிபதி முதல் விவாகரத்து கிடைப்பதற்கு முன்பு நடந்த இந்த திருமணம் சட்டப்படி எப்படி செல்லும் என்று ஜாய் தரப்பிற்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜாய் கிரில்டாவுக்கு முதல் திருமணம் 2018 ஆம் ஆண்டு நடந்தது. 2020 ஆம் ஆண்டிலிருந்து அவர் முதல் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். 2023 ஆம் ஆண்டு ரங்கராஜுடன் பழக்கம் ஏற்பட்டபோது, அவர் தனது மனைவி ஸ்ருதி பிரியாவை விவாகரத்து செய்ய உள்ளதாக பொய் சொல்லி உள்ளார்.
மேலும் நீ உனது முதலாவது கணவரை விவாகரத்து செய்து, என்னை திருமணம் செய்து கொள் என்று மாதம்பட்டி ரங்கராஜ் சொன்னதாகவும் ஜாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு 2024 ஆம் ஆண்டு ஜாய் கர்ப்பமாகியுள்ளார். ஆனால் ரங்கராஜ் அவரை மிரட்டி, கட்டாயப்படுத்தி அந்த கருவை கலைக்க சொன்னதாக கூறப்பட்டது.

தொடர்ச்சியாக மூன்றாவது முறை கர்ப்பமான போது தான் இந்த முறை கருவை கலைக்க மாட்டேன் என்று ஜாய் உறுதியாக கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
தற்போது ஜாய்க்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் மீண்டும் DNA பரிசோதனை செய்ய வேண்டும் என ரங்கராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அது எனது குழந்தை என்பது உறுதியானால் அதனை வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை விசாரித்து எதிர்வரும் 14ஆம் திகதிக்குள் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Listen News!