• Nov 13 2025

திவாகர் மூச்சு மொத்தமா சுருங்கி போச்சு.! பிக் பாஸ் கேமராமேன் வைத்த அதிரடி ஆப்பு

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு  விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்து பல சர்ச்சையான கருத்துக்களை எதிர்நோக்கி வருகின்றது. அதற்கு காரணம் இந்த  நிகழ்ச்சியில் கலந்து  கொண்டவர்களில் அதிகமானவர்கள்  சோசியல் மீடியா மூலம் பிரபலமானவர்கள் தான். 

அதிலும் குறிப்பாக வாட்டர் மெலன் திவாகர்,  கலையரசன், அரோரா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.  திறமையானவர்கள் பலர் வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இவர்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்தது பல கேள்விகள் எழுவதற்கு காரணமாக அமைந்தது. 

இதை தொடர்ந்து ஒரு கட்டத்தில் திவாகருக்கு  மக்கள் ஆதரவு வழங்க தொடங்கினர். உண்மையாகவே இந்த வீட்டில் இருப்பவர்களுக்குள் மத்தியில் திவாகர்  உண்மையாக இருக்கின்றார்,  பெண்களை மதிக்கின்றார் என்று புகழப்பட்டார். 


இந்த நிலையில், வாட்டர் மெலன் ஸ்டாருக்கு பிக் பாஸ் கேமரா மேன் ஆப்பு அடித்துள்ளார்.  இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. தற்போது இது தொடர்பான வீடியோ  சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.  

அதாவது  பிக் பாஸ்  வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து கேமராக்களை பார்த்து நடிப்பது,  பேசுவது,  திட்டுவது என தன்னுடைய அத்தனை அட்டூழியங்களையும் காட்டி வருகின்றார்  திவாகர்.  விஜய் சேதுபதி கூட பல முறை  எச்சரித்து இருந்தார். 

எனினும் அதையெல்லாம் பொருட்படுத்தாது தன்னுடைய நடிப்புத் திறமையை தொடர்ச்சியாக காட்டி வருகின்றார் திவாகர். இவ்வாறான நிலையிலே  நேற்று மீண்டும் வினோத்தை குற்றம் சாட்டி குறட்டை பிரச்சனை பற்றி பேச,  அங்கிருந்து கேமரா உடனடியாக மறுபக்கம் திரும்பியுள்ளது. இது அவருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

இதனால் சற்று நேரம்  கேமராவை பார்த்து  மீண்டும் பேச, அது மீண்டும் மறுபக்கம் திரும்பியது.   என்ன செய்வது என்று தெரியாமல் கடுப்பில் அங்கிருந்து  விலகிச் சென்றார் திவாகர். தற்போது இந்த வீடியோக்கள்  வைரல் ஆகி வருகிறது. 

Advertisement

Advertisement