தமிழ் சினிமா மற்றும் சமையல் உலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்த மாதம்பட்டி ரங்கராஜ், சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரில்டாவை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் சமீபத்தில் நீதிமன்றம் மற்றும் சமூக வலைத்தளங்களில் புதிய திருப்பத்தை பெற்றுள்ளது.

ஜாய் கிரில்டா கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் பல பதிவுகளை பகிர்ந்து, திருமண வாழ்க்கையைப் பற்றி கருத்துகளைக் கூறி வருகிறார். அந்தவகையில், தற்பொழுது கிரில்டா வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அதில் கிரில்டா, "பரிசோதனைக்கு நீங்கள் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளீர்கள்.. ஆனால் எங்கு ஒழிந்து கொண்டிருக்கிறார்? என்ன பயம்? அடிக்கடி பணம் கொடுத்து எனக்கெதிரா யூடியூப், செய்திகளில் தகவல்கள் வெளியிடச் செய்கிறீர்கள்.. நான் அமைதியாக இருந்தாலும், உங்க உள்குத்து என்னன்னு தெரியாம போய்டுமா என்ன? தைரியம் இருந்தால் டிஎன்ஏ டெஸ்டுக்கு வாங்க ஹஸ்பெண்ட். சும்மா ஸ்டேட்மென்ட் கொடுத்தால் மட்டும் போதாது..." என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவின் மூலம் ஜாய் கிரில்டா மாதம்பட்டி ரங்கராஜை மீண்டும் வம்பு இழுத்துள்ளார் என்பது தெரிகின்றது. இந்தப் பதிவு தற்பொழுது ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.
Listen News!