• Apr 20 2026

நடிகர் அபிநய் பற்றி பலரும் அறிந்திடாத உண்மைகள்... வெளிப்படையாக பேசிய பிரபல நடிகை.!

shali / 5 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் திரையுலகின் முன்னணி நடிகர் அபிநய் காலமானார் என்ற செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிநய்யை நினைத்து உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அது தற்பொழுது வைரலாகி வருகின்றது. 


விஜயலட்சுமி கூறியதாவது, “அபிநய்யுடன் சேர்ந்து ஒரு விளம்பர படத்தில் நடித்தேன். அப்போது நான் ‘சென்னை 28’ படத்தை முடித்திருந்த சமயம். அந்த விளம்பர பட ஷூட்டிங் டெல்லியில் நான்கு நாட்கள் நடைபெற்றது.” என தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். 

மேலும் அவர், “இப்போது இருப்பது போல் அப்போது நான் இருக்கவில்லை. அறிமுகமில்லாதவர்களை பார்த்தால் பயம் வந்துவிடும். கூச்ச சுபாவம் கொண்டிருந்தேன். அந்த காலத்தில் நான் தங்குவதற்கு ஒரு அப்பார்ட்மெண்ட் கொடுக்கப்பட்டது. அங்கு அபிநய்யும் தங்கியிருந்தார்.


நான் அப்போது ஃபெரோஸைக் காதலித்துக் கொண்டிருந்தேன். அதனால் இன்னொரு ஆணுடன் இருப்பதை அவரிடம் சொல்வதை தவிர்த்தேன். பதற்றத்துடன் இருந்தேன். ஆனால் அபிநய் ஜென்டில்மேன். தொழிலில் நேர்மை கொண்டவர்.” என்றார். 

அத்துடன் விஜயலட்சுமி, “ஒவ்வொரு ஃப்ரேமையும் தனதாக்கிக்கொள்வார். ஷூட்டிங் முடிந்து அந்த அப்பார்ட்மெண்ட் ஹாலில் அமர்ந்து அவர் குடித்துக்கொண்டிருப்பார். அவருடன் யாரும் இருக்கமாட்டார்கள். முழு பாட்டிலையும் தீர்த்துவிடுவார்.” எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இந்த கருத்துகள், அபிநய்யின் மனிதநேயம் மற்றும் பிறரின் உணர்வுகளை மதிக்கும் பண்பை வெளிப்படுத்துகிறது. நடிகை விஜயலட்சுமி, அவரை நினைவுகூரும் போது தன் மனதில் வருகிற உணர்ச்சிகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். 

Advertisement

Advertisement