தென்னிந்திய சினிமா துறையில் பிரபல நடிகையாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் பான் இந்திய மொழிகளில் நடித்து வருகின்றார். மேலும் ராஷ்மிகா மந்தனா நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றார்.
கடந்த சில வருடங்களாகவே ராஷ்மிகா மந்தனாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையில் காதல் கிசு கிசு தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தன. ஆனால் இது தொடர்பில் அவர்கள் இருவரும் மௌனம் காத்தார்கள்.
எனினும் சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும், இவர்களுடைய திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி நடைபெறும் எனவும் கூறப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் ராஷ்மிகா பேட்டி ஒன்றும் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான த கேர்ள் பிரண்ட் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா, அங்கு பலருக்கு முன்னிலையிலும் ராஷ்மிகா கையை பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதன் மூலம் அவர்களுடைய காதலை வெளிப்படையாகவே வெளி உலகத்திற்கு அறிவித்திருக்கின்றனர். இதோ அந்த வீடியோ,
#VijayDeverakonda greeted #RashmikaMandanna with a kiss on the Hand. pic.twitter.com/usYulYYpaD
Listen News!