• Nov 13 2025

‘அரசன்’ படத்தில் சமந்தா இணைத்துள்ளது உறுதியா.? படக்குழுவின் அறிவிப்பு இதோ.!

Aathira / 15 hours ago

Advertisement

Listen News!

திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூட்டணி ஒன்று உருவாகி வருகிறது. ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த செய்தியான நடிகர் சிலம்பரசன் மற்றும் இயக்குநர் வெற்றி மாறன் இணையும் புதிய படம் “அரசன்” இம்மாதம் நவம்பர் 24, 2025 முதல் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிம்பு – வெற்றிமாறன் இணையும் இந்த படம், வெளிவரும் முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. வெற்றி மாறனின் சமூகம் சார்ந்த கதைகளும், சிம்புவின் தீவிரமான நடிப்பு திறமையும் இணைந்தால், அது தமிழ் சினிமாவில் மாபெரும் படைப்பாக மாறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


வெற்றி மாறன் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும் சமூக பிரச்சனைகளை ஆழமாகச் சித்தரிக்கும் தனித்துவம் கொண்டவை. அதேசமயம், சிம்புவின் நடிப்பில் எப்போதும் ஒரு தனித்துவமான ஆற்றல் காணப்படுகிறது. இந்த இருவரின் இணைப்பு இயற்கையாகவே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உயர்த்தும்.

தற்போது வெளிவந்த புதிய தகவலின் படி, ‘அரசன்’ படத்தில் நாயகியாக சமந்தா ரூத் பிரபு நடிக்கப் போவதாகவும், இதற்காக படக்குழு அவரை அணுகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சமந்தா, தற்போது தனது உடல்நலத்தை மீண்டும் மேம்படுத்திக் கொண்டு சினிமா உலகில் புதிய முயற்சிகளைத் தொடங்கியுள்ளார்.

இது இன்னும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படாத தகவல் என்றாலும், சினிமா வட்டாரங்களில் இதற்கான பேச்சுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement