• May 12 2025

இலங்கைக்கு வருகை தந்த சூப்பர் சிங்கர் பிரபலம்..! யார் தெரியுமா..?

subiththira / 18 hours ago

Advertisement

Listen News!

விஜய் டீவியின் 'சூப்பர் சிங்கர் ஜூனியர்' சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் பிரகதி குருபிரசாத். தமிழர்களுக்கு பரிச்சயமான குரலாகவும், இளம் பாடகராகவும் சிறந்த இடம் பிடித்திருக்கின்றார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும், தமிழ்மொழி மற்றும் கலாச்சாரம் மீதான பாசத்தால் இசையில் ஈடுபட்ட பிரகதி, ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெரும் வரவேற்பைப் பெற்றார்.


இந்நிலையில் சமீபத்தில் அவர் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்குள்ள அழகான இடங்களில் எடுத்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


சூப்பர் சிங்கர் மூலம் புகழ்பெற்ற பிரகதி, அதன் பின்னர் பல தமிழ்ப் பாடல்களில் குரல் கொடுத்துள்ளார். அவரது குரலுக்கான ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பிரகதி, இசையைத் தாண்டியும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார்.


சமீபத்தில் பிரகதி தனது சுற்றுலா புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் அவர் பிரபலமான பல இடங்களில் புகைப்படங்கள் எடுத்துள்ளார். பிரகதியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்த உடனே ரசிகர்கள் கமெண்ட்ஸில் பரவசமான பதில்களை பதிவு செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement