• May 12 2025

தாயைப் பிரிந்த சோகத்தில் வைரமுத்து..!! உருக்கமான பதிவுகளால் ரசிகர்களை நெகிழவைத்த கவிஞர்!

subiththira / 17 hours ago

Advertisement

Listen News!

தமிழ் இலக்கியத்தின் நதி போல், தனது கவிதைகளாலும் பாடல்களாலும் தமிழரசுக்கு பெருமை சேர்த்தவர் கவிஞர் வைரமுத்து. ஏராளமான பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்ற மனிதர் இன்று, ஒரு மகனாகக் கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டு இருக்கின்றார்.


கவிஞர் வைரமுத்துவின் தாயார் திருமதி அங்கம்மாள் உடல்நிலை பாதிப்புக் காரணமாக நேற்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார். வயதானாலும், தாயாரின் பாசத்தை சொல்ல வார்த்தைகள் போதாது என்பதற்கேற்ப, தனது தாயின் மரணச் செய்தியை வைரமுத்து மிகுந்த சோகத்துடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதன்போது, “என்னைப் பெற்ற அன்னை திருமதி அங்கம்மாள் அவர்கள் சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன். இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் இன்று மாலை நடைபெறும்." எனக் கூறியுள்ளார்.



தன்னை கவிஞராக மட்டுமல்ல, மனிதராகவும் உயர்த்தியவர் தனது தாயார் என்பதை வைரமுத்து பல நேரங்களில் உருக்கமாகக் கூறியுள்ளார். சில சமயம் உரையாடல்களின் போதும், “எனது வாழ்வின் ஒவ்வொரு கவிதைக்கும் நான் பெற்ற வெற்றி மட்டும் காரணமல்ல, எனக்கு சொற்களை உருவாக்க வைத்தது என் தாயின் ஆசிகள்” எனக் கூறியிருந்தார். மேலும் இந்த சோகம் தனக்கு மிகப்பெரிய இழப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் வைரமுத்து.

Advertisement

Advertisement