• Nov 23 2025

ராப்பர் வேடனுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.. என்ன தெரியுமா.?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான காமெரா தொழில்நுட்பத்துடனும், உணர்வுபூர்வமான கதைகளுடனும் தனது இயக்குநர் திறமையை நிரூபித்தவர் விஜய் மில்டன். தற்போது அவர் இயக்கி வரும் புதிய படத்தில் தமிழ்த் திரையுலகின் புதிய முகங்களை அறிமுகம் செய்யும் ஒரு பிரம்மாண்டமான முயற்சி இடம்பெறுகின்றது.


இந்தப் படத்தில், பிரபல பாடகர் பால் டப்பா என்கின்ற அனிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய விசேஷமாக ராப்பர் வேடன், இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு தற்பொழுது Gods & soldiers என்று பெயரிடப்பட்டுள்ளது. 


தமிழில் ஹிப்ஹாப் மற்றும் ராப் கலாசாரத்தில் வேடனுக்கு ஒரு வலுவான ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் இந்தப் படத்தின் மூலம் இவர் அதிகளவான ரசிகர்களை கவரவுள்ளார் எனவும் தெரிகின்றது. 


Advertisement

Advertisement