• Apr 16 2025

சத்யராஜின் மகள் தனது கட்சிக்காக என்ன செய்துள்ளார் தெரியுமா..?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் சத்யராஜின் மகள் திவ்யா அவர்கள் தி.மு.க கட்சியில் இணைந்து கொள்வதாக அறிவித்திருந்தார்.இதற்கு அவரது அப்பாவும் வாழ்த்து கூறி அறிக்கை விடுத்திருந்தார்.

இந்த கட்சி மிகவும் சமய நம்பிக்கை இருப்பதால் அதில் சேர்ந்தேன் என கூறியிருந்தார்.


இவரை மலர் கொடுத்து முழுமனதோடு ஸ்டாலின் அவர்களும் ஏற்று கொண்டார். சத்யராஜ் குடும்பம் சேர்ந்ததில் இக் கட்சியினர் மிகவும் சந்தோஷமாக உள்ளனர்.இந்நிலையில் திவ்யா தனது கட்சிக்காக ஒரு விடயத்தை செய்துள்ளார்.இவர் செய்த இந்த காரியம் இணையத்தில் வைரலாகியுள்ளது.


அதாவது திவ்யா தான் ஓட்டும் சைக்கிளில் தி.மு .க கட்சியின் கொடியினை பொறுத்தியுள்ளார்.மற்றும் அதற்கான காரணத்தினையும் குறிப்பிட்டுள்ளார்.அவர் "கடமை, கண்ணியம், ஒழுக்கம் ஆகிய கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். எனது வாகனத்தில் திமுக கொடியை ஏற்ற விரும்பினேன். எனக்கு கார்கள் பிடிக்காததால் ஆடம்பரமான கார் என்னிடம் இல்லை. இது பெரிய கார்களை விட சிறந்தது" என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement