நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 13 பேருக்கு பத்மபூஷன் விருது வழங்கவுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.அதில் தல அஜித்தின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.நேற்று இது குறித்து நன்றி தெரிவித்து அஜித் அறிக்கை விட்டிருந்தார்.தொடர்ந்து சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர்.
இந்நிலையில் வலைப்பேச்சு அந்தணன் இது குறித்து ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.அதாவது பட ப்ரோமோஷன்கள் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்து கொள்ளாத இவர் எவ்வாறு இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு செல்வார்.மற்றும் மீடியா முன் எந்த வித நேர்காணலையும் செய்வதற்கு இவர் விரும்பியதில்லை இருப்பினும் கார் ரேசிங்கில் வெற்றி பெற்றதும் தொடர்ந்து பல நேர்காணலை செய்து வந்தார்.தேவைக்கு மட்டுமே பழகும் அஜித் வன்ம கிடங்கா இல்லை நானா என குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் தி.மு .க கட்சியினை எதிர்த்த அஜித் தற்போது "red giant movies" உடன் படம் பண்ணுவதற்கு ஒத்துக்கொண்டுள்ளமையினால் இது விஜய்க்கு எதிரான தீர்மானம் எனவும் இவருக்கு இந்த பத்மபூஷன் விருதுக்கு இவர் நடிகனாகவோ அல்லது சிறந்த விளையாட்டு வீரனாகவோ பெறுவதற்கு தகுதியற்றவர் என கூறியுள்ளார்.
படம் குறித்து எந்தவித நிகழ்விலும் கலந்து கொள்ளாத இவருக்கு எதற்கு சினிமாவில் சாதித்தார் என விருது வழங்குகிறார்கள்.அதைவிட கார் ரேசிங்கில் கூட இவர் கார் ஒட்டவில்லை யாரோ ஒருவர் ஒட்டியுள்ளதாகவும் இருப்பினும் இவர் ஒன்றும் முதல் இடம் வரவில்லையே மூன்றாம் இடம் தானே நிச்சயமாக இவரது பெயர் இந்த விருது பட்டியலில் வந்ததற்கு காரணம் தி.மு .க அரசு விஜய் கட்சிக்கு எதிராக அஜித் ரசிகர்களை எடுக்கும் முயற்சியே எனவும் மிக ஓபன் ஆக பேசியுள்ளார்.
Listen News!