• Dec 02 2024

மீண்டும் இணைந்த ராஜா ராணி ஜோடி... அன்னப்பூரணி படத்தில் நயனுடன் நடிக்க ஜெய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ஜெய் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ராஜா ராணி படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இவர்களுடைய ஜோடி தான். அதை அழகாக காட்டியிருப்பார் இயக்குனர் அட்லீ. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த ஜோடி அன்னபூரணி படத்தில் இணைந்துள்ளார். நிலேஷ் கிருஷ்ணா இயக்கி வரும் இப்படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கிறார்.


சமீபகாலாமாக ஜெய்யின் திரையுலக பயணத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்கள் இல்லாததால் அவருடைய சம்பளமும் அதிகரிக்கவில்லை என்கின்றனர். சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளிவந்த லேபிள் விரைவில் வெளிவரவிருக்கும் கருப்பர் நகரம் உள்ளிட்ட படங்கள் கண்டிப்பாக நடிகர் ஜெய்க்கு நல்ல வரவேற்பை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


அன்னப்பூரணி படத்தின் கிலிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி இருந்தது. இப்படம் வருகிற டிசம்பர் 1ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். கதையின் நாயகியாக இப்படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம். அதே போல் நடிகர் ஜெய் இப்படத்தில் நடிக்க ரூ. 75 லட்சம் தான் சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் திரைக்கு வரவிருக்க்கிறது. 

Advertisement

Advertisement