தென்னிந்திய சினிமாவின் மாபெரும் நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய பான்-இந்திய திரைப்படம் ‘ராஜா சாப்’ தற்போது ரசிகர்கள் மற்றும் திரை உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்டு வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் “Rebel Saab” நவம்பர் 23ம் தேதி வெளியாகும் என தற்பொழுது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் மாருதி இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபாஸுடன், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் முக்கிய நடிகர்களாக நடித்துள்ளனர்.
பிரபாஸ் ரசிகர்கள் காத்திருந்த முதல் சிங்கிள் “Rebel Saab” பாடல் நவம்பர் 23ம் தேதி வெளியாகவுள்ளதாக உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடல் வெளியீடு முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பெரும் உற்சாகம் காணப்படுகிறது.
பாடல் பிரபாஸ் கதாபாத்திரத்தின் வித்தியாசமான ஸ்டைல் மற்றும் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இப்படம் 9 ஜனவரி, 2026 திரையரங்கில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!