விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களிடம் அசைக்க முடியாத வரவேற்பை பெற்று பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் சீசன் 9. இது ஒவ்வொரு நாளும் புதிய சண்டை சச்சரவுகளை உருவாக்கி வருகிறது.

தற்போது வெளியான புதிய ப்ரோமோ, இந்த வார நிகழ்வுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ரசிகர்களிடையே பரபரப்பை உருவாக்கியுள்ளது.
ப்ரோமோவில், பிக்பாஸ் அனைவரிடமும் இந்த வாரம் முழுவதும் நிகழ்ந்த டாஸ்க்குகளில் சிறப்பாக கலந்து கொள்ளாத இரண்டு நபர்களை போட்டியாளர்களைச் சொல்லச் சொல்கிறார்.

அதற்குப் போட்டியாளர்கள், சாண்ட்ரா, திவ்யா மற்றும் ரம்மியா ஆகியோரது பெயர்களைச் சொல்லுகிறார்கள். இதனால் திவ்யா சற்று கவலையடைகின்றார்.
Listen News!