பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பாண்டியன் பழனியைப் பார்த்து உனக்கும் இந்தக் குடும்பத்துக்கும் இடையே இருக்கிற உறவு முடிஞ்சு போய்ச்சு என்று சொல்லுறார். அதைக் கேட்ட பழனி கோபத்தில் நீங்கள் வார்த்தையை விடுறீங்க என்கிறார். பின் கோமதியும் பழனியைப் பார்த்து எப்ப இப்புடி மாறினீ என்று கேட்கிறார்.

அதுக்கு பழனி நான் மாறல என்கிறார். அதனை அடுத்து பாண்டியன் பழனியை பார்த்து என்னை இங்க யாராலையும் ஒன்னுமே பண்ண முடியாது என்கிறார். பின் கோமதி பழனி கிட்ட அண்ணனுங்களோட சேர்ந்து சந்தோசமா இரு, போ என்கிறார்.
அதைக் கேட்ட பழனி அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியேறுறார். இதனைத் தொடர்ந்து பழனி அம்மா கிட்ட போய் பாண்டியன் வீட்ட யாருமே என்னை நம்பவே இல்ல என்கிறார். அதைக் கேட்டு எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். பின் சக்திவேல் அவங்க உன்ன வேணாம் என்று சொன்னா போகட்டும் நீ உன்ர வேலையைப் பார் என்கிறார்.

மேலும், முத்துவேல் பழனியைப் பார்த்து உனக்கு நாங்க இருக்கிறோம் என்கிறார். அதனை அடுத்து கோமதி மீனாகிட்ட பழனியை பற்றிக் கதைச்சு அழுது கொண்டிருக்கிறார். பின் பழனி நல்ல வரணும் என்று நினைச்சன் ஆனா இப்புடி நம்ப வைச்சு ஏமாத்திட்டான் என்று சொல்லி புலம்புறார் கோமதி. இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!