• Jan 19 2025

பிரபல இயக்குனர் மாரடைப்பால் மரணம்... அதிர்ச்சியில் சினிமா திரையுலகம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

2004ல் வெளியாகி பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்ற படம் தூம். ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் அபிஷேக் பச்சன் நடிப்பில் கமர்சியல் ஹிட் ஆன அந்த படத்தின் இரண்டாம் பாகம் 2006ல் வெளிவந்தது. இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர் சஞ்சய் காத்வி.


சஞ்சய் காத்வி தற்போது 56 வயதாகும் நிலையில் இன்று காலை திடீரென மாரடைப்பால் காலமானார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இன்னும் மூன்று தினங்களில் சஞ்சய் காத்வி தனது 57வது பிறந்தநாளை கொண்டாட இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இயக்குனரின் திடீர் மரணம் பற்றி நடிகர் அபிஷேக் பச்சன் கடும் அதிர்ச்சி உடன் இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டு இருக்கிறார். அவருக்கு எமது ஆழ்ந்த இரங்கல். 

Advertisement

Advertisement