• Nov 21 2025

அட்ராசக்க.!! தளபதி ரசிகர்களுக்கு கிடைத்த அதகள அப்டேட்.! என்ன தெரியுமா.?

subiththira / 9 minutes ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய், தற்போது தனது அடுத்த படமான ‘ஜனநாயகன்’ படத்தின் பணிகளை முழுமையாக முடித்துள்ளார். எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பான்-இந்திய அளவிலான அரசியல்–சமூக த்ரில்லர் படம், 2026 பொங்கல் பண்டிகை தினத்தில் வெளிவர உள்ளது.


விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள சூழலில், அவர் நடிக்கும் ஜனநாயகன் படம் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் முழு தமிழ் நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது அவர் அரசியலுக்கு செல்லும் முன் நடித்த கடைசி திரைப்படம் என கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ குறித்த எதிர்பார்ப்புகள் சாதாரண அளவை மீறி அதிகரித்துள்ளன.

‘ஜனநாயகன்’ படத்தில் விஜயுடன் பல முன்னணி நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் இசையை அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். அவரின் இசை இப்பொழுதே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிருத்தும் விஜயும் இணையும் ஒவ்வொரு படமும் இசை பட்டியலில் பெரிய சாதனைகள் படைப்பதால், ‘ஜனநாயகன்’ பாடல்கள் மற்றும் BGM-க்கும் மிகப்பெரிய பேன்ஸ் உருவாகியுள்ளது.


இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் தரும் வகையில், தயாரிப்பு நிறுவனம் இன்று ஒரு முக்கிய அப்டேட்டை மாலை 05:30 மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அப்டேட் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

Advertisement

Advertisement