• Jan 19 2025

தீபாவளி தினத்தில் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் போட்டோ போட காரணம் என்ன தெரியுமா?- எல்லாம் ட்ராமா தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


இசையமைப்பாளர் டி.இமான் அண்மையில் அளித்த பேட்டியில், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், இனிமேல் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணிபுரிய வாய்ப்பே இல்லை என்றும் கூறியிருந்தார்.இமானின் இந்த பேட்டி இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது.

 மேலும், இமான் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ய சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று சோசியல் மீடியாவில் செய்தி பரவியது. மேலும், டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகாவும், சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசியதால், அது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.


இந்த சர்ச்சை தற்போது சற்று மறைந்து வரும் நிலையில் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய போட்டோவை ஷேர் செய்து தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதுகுறித்து பேசிய சினிமா மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, சிவகார்த்திகேயன் குடும்ப போட்டோவை போட்டதற்கு பின் ஒரு அரசியல் இருக்கிறது.


 சிவகார்த்திகேயன் மற்றும் இமான் பிரச்சனையில் உள்ள உண்மை என்ன என்பது பத்திரிக்கையாளர்களுக்கு நன்றாக தெரியும். அது மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனுக்கு பெண்கள் மத்தியில் ஒரு கெட்ட பெயர் வந்துவிட்டது அதை சரி செய்வதற்காகத்தான் அந்த போட்டோ. இமான் சொன்ன குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், என்னால் குடும்பத்தோடு இப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியாது. எனவே இமான் சொன்னது பொய் என்பதை உணர்த்தவே சிவகார்த்திகேயன் டிராமா போட்டுள்ளார் என்றார்.


Advertisement

Advertisement