• Jan 18 2025

தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல் நடிகை ராதாவைப் பற்றி அறிந்திருக்கின்றீர்களா?- நடிகர் கார்த்தியுடன் நடித்திருக்கின்றாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியலில் நடித்து வரும் பிரபலங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது. அந்த வகையில் இந்த சீரியலில் வில்லியாக ராதா என்னும் காரெக்டரில் நடிப்பவர் குறிதது தான் பார்க்கலாம் வாங்க.

இவருடைய முழுப் பெயர் தர்ஷிகா. இவர் மாடல் மற்றும் நடிகையாகவும் வலம் வரும் இவர் ஆரம்பத்தில் விளம்பரங்களில் நடித்து வந்தார்.அதனைத் தொடர்ந்து விஜயலக்ஷ்மி நடிப்பில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான டும்டும்டும் சீரியலில் மீரா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.


இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரையிலும் அறிமுகமானார். இதனால் விஜயலக்ஷ்மிக்கும் இவருக்கும் இடையில் நல்ல நட்புக் காணப்படுகின்றதாம். அண்மையில் இவர் கார் வாங்கியதை இன்ஸ்டாகிராமில் போட்ட போது விஜயலக்ஷ்மி டார்லிங் வாழ்த்துக்கள் என்று விஃஸ் பண்ணினாராம்.

மேலும் இவர் நடிகர் கார்த்தி நடித்திருந்த மலபார் கோல்ஃட் நகை விளம்பரத்திலும் நடித்திருந்தாராம். இது தவிர போட்டோ ஷுட் நடத்துவதிலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கும் இவருக்கு பிராணிகள் என்றால் ரொம்ப பிடிக்குமாம். அது தவிர பயணம் செய்வது என்றால் ரொம்பவும் பிடிக்குமாம்.

இவர் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் ஆட்டோ ஓட்டுபவராக நடித்து வந்தாலும் அவர் நடிக்கும் ராதா என்னும் கதாப்பாத்திரத்தின் மூலம் தான் பிரபல்யமாகியிருக்கின்றாராம்.இது தவிர இவர் சன்டிவியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு மற்றும் பாண்டவர் இல்லம் சீரியலிலும் நடித்திருக்கின்றாராம்.


ஆரம்பத்தில் தொகுப்பாளராகத் தான் அறிமுகமாகினாராம். ரொம்ப பிட்னஸ்லையும் அதிக ஆர்வம் இருக்கும் இவர் ஆரம்பத்தில் பப்லியாகத் தான் இருந்தாராம். மீடியாவுக்கு வந்ததுக்கு பிறகு தான் பிட்னஸ்ல அதிக ஆர்வம் உடையவராகவும் இருக்கின்றாராம். அத்தோடு தன்னுடைய ஸ்கின் ரொட்டீன் என்னவென்று சமூக வலைத்தளங்களின் ஊடாக தனது ரசிகர்களுக்கு தெரிவித்து வருகின்றாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















Advertisement

Advertisement