• Feb 23 2025

’D50’ திரைப்படத்தில் தனுஷின் கேரக்டர் பெயர் இதுவா? மாஸ் தகவல்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!


தனுஷ் நடித்து இயக்கும் ’D50’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ’ராயன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் தனுஷின் கேரக்டர் பெயர் குறித்த தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தில் தனுஷின் கேரக்டர் காத்தவராயன் என்று கூறப்படுகிறது. 


வடசென்னை மையமாக கொண்ட கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அண்ணன் தம்பிகள் இடையே ஏற்படும் பிரச்சனைகள், அதனால் ஏற்படும் விளைவுகள் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது. தனுஷின் சகோதரர்களாக எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷான், துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்க மேலும் இந்த படத்தில் அனிதா சுரேந்திரன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராமன் ஆகியோர் நடித்துள்ளனர்.


சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த  படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான போது அதில் தனுஷ் மொட்டை தலையுடன் இருந்தது மாஸாக இருந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், டீசர், ட்ரெய்லர் ஆகியவையும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


இந்த நிலையில் ’D50’ படத்தை முடித்து விட்ட தனுஷ் அடுத்ததாக தனது சகோதரி மகன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார், இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அதுமட்டுமின்றி தனுஷ் தற்போது சேகர் கம்முள்ளா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement