• Jan 19 2025

தமிழக வெற்றி கழகம் தலைமை அலுவலகம் இதுதான்: விஜய் அறிவிப்பு..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் ஆரம்பித்துள்ள விஜய் வெற்றி கழகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் இந்த கட்சியின் பெயர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் வந்தது என்பதும் ஏராளமான திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் விஜய்யின் புதிய அரசியல் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் விஜய் தனது அரசியல் கட்சியின் தலைமை அலுவலகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக பனையூரில் உள்ள அலுவலகத்தில் தான் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வரும் நிலையில், இனி பனையூரில் உள்ள அலுவலகம் தான் தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகம் என்று விஜய் அறிவித்துள்ளார்.

தளபதி விஜய் ஆரம்பித்துள்ள விஜய் வெற்றி கழகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் இந்த கட்சியின் பெயர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் வந்தது

அரசியல் கட்சி குறித்த ஆலோசனைகள், முக்கிய முடிவுகள் அனைத்தும் இனி பனையூரில் உள்ள அலுவலகத்தில் தான் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தனது அரசியல் கட்சியை தொடங்கிய ஒரு சில மணி நேரத்திலேயே தலைமை அலுவலகத்தையும் அறிவித்தது கட்சியின் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.




தமிழக வெற்றி கழகம் அடுத்தடுத்து இனி பல்வேறு அதிரடி முடிவுகளை எடுக்கும்  என்று கூறப்படுவதால் விஜய்யின் அரசியல் கட்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement