• Jan 18 2025

பூமர் ஆன்டிகள் தொல்லை தாங்க முடியவில்லை... குழந்தை பெற்று கொள்ளாத காரணம் இதுதான்... சாந்தனு-கிகி ஓபன் டாக்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பாக்யராஜின் மகன் சாந்தனு நடிப்பில் சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். சமீபத்தில் தனது மனைவி கிகி எனும் கீர்த்தியுடன் ஜாலியாக அளித்த பேட்டியில் பல சுவாரஸ்ய விஷயங்களையும், கசப்பான அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.


தமிழ் சினிமாவில் அறிமுகமான சக்கரக்கட்டி திரைப்படமே அவருக்கு வெற்றி படமாக அமையவில்லை. அதன் பின்னர் அவர் நடித்த சித்து + 2, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி, வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும், மாஸ்டர், கசடதபற, முருங்கைக்காய் சிப்ஸ், ராவண கோட்டம் மற்றும் ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றியை தழுவின. 


பாக்கியராஜின் மகனாக இருந்து விட்டு தமிழ் சினிமாவில் எளிதாக நுழைந்தாலும் தனியாக இன்னமும் ஒரு பெரிய வெற்றியை ருசிக்க முடியவில்லையே என்கிற வருத்தம் சாந்தனுவுக்கு உள்ளது. ஆரம்பத்தில் அவர் தேர்வு செய்த கதைகள் மற்றும் இயக்குநர்கள் சரியாக அமையாத நிலையில், தொடர்ந்து பல படங்கள் தோல்வியைத் தழுவின. 

இந்நிலையில், அசோக் செல்வன் உடன் இணைந்து டூயல் ஹீரோ சப்ஜெக்ட்டான ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்த சாந்தனுவுக்கு தற்போது வெற்றி கிடைத்திருப்பதாக பேட்டி அளித்து வருகிறார். கீர்த்தனாவுடன் திருமணம்: தொகுப்பாளினியாக இருந்த கிகி எனும் கீர்த்தனாவை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார் சாந்தனு. திருமணமாகி சுமார் 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், இன்னமும் சாந்தனு மற்றும் கீர்த்தனாவுக்கு குழந்தைகள் ஏதும் பிறக்கவில்லை. 

எங்கே போனாலும் இதே கேள்வி தான் ஒரு திருமணத்துக்கு கூட போக முடியவில்லை என்றும் எங்கே போனாலும் சில பூமர் ஆன்டிகள் நைஸாக வந்து குழந்தை எப்போன்னு கேட்டு டார்ச்சர் பண்றாங்க, அது வரும்போது வரும். நாங்க 2 பேரும் கெரியர்ல சாதிக்கணும்னு இருக்கம் பொறுமையா பெத்துக்கலாம் என அதிரடியாக பதில் அளித்துள்ளனர். 


சும்மா தான் பேசிட்டு இருப்போம். கொஞ்சம் சவுண்டு கேட்டு விடக் கூடாது. உடனே அத்தை பூர்ணிமா பாக்கியராஜ் ஓடி வந்து என்ன ஆச்சு, எல்லாம் ஓகே தானா என கேட்பாங்க. நான் உடனே "சும்மா பேசிட்டு இருக்கோம் அத்தை" என காமெடி டயலாக் போல பதில் அளித்து அனுப்புவேன் என செம ஓபனாக பேசியுள்ளார் கிகி.

Advertisement

Advertisement