மகாராஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்தான் நடிகை சாச்சனா. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனை படைத்ததோடு அதில் சாச்சனாவின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் பங்கு பற்றினார் சாச்சனா. பிக் பாஸ் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது நாளில் யாரும் எதிர்பாராத வகையில் 24 மணி நேர எலிமினேஷனில் சிக்கி சாச்சனா வெளியேறியிருந்தார். இந்த சம்பவம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதைத்தொடர்ந்து சாச்சனா மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதன்படி கிட்டத்தட்ட மூன்று நாட்கள் கழித்து மீண்டும் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்தார் சாச்சனா. அதுவரையில் அவர் சீக்ரெட் ரூமில் இருந்ததாக கூறப்பட்டது.
d_i_a
பிக் பாஸ் சீசன் 8ல் கலந்துகொண்ட போட்டியாளர்களுள் சாச்சனா மிகவும் வயது குறைந்தவர்களாக காணப்படுகின்றார். இதனால் இவருக்கு ஆரம்பத்தில் அமோக வரவேற்பு காணப்பட்டது. எனினும் 63 வது நாளில் எலிமினேட் ஆகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார்.
இந்த நிலையில், தனியா யூட்யூப் சேனல் ஒன்றுக்கு சாச்சனா வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் அதில் மஞ்சரி மற்றும் ஜெஃப்ரி பற்றி கூறியுள்ளார்.
அதில் ஆரம்பத்தில் மஞ்சரி வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்தபோது இவங்க கடுமையான போட்டியாளராக இருப்பாங்க என்று நினைத்தேன். ஆனால் அதற்குப் பிறகு அவர்களுடன் பேசி பழகியதும் இவங்களைப் போல வேறு யாரும் இல்லை.. ப்பாபா.. வேற லெவல் என்ற அளவுக்கு மஞ்சரி இருந்தாங்க என்று சாச்சனா தெரிவித்துள்ளார்.
அதேபோல தனக்கும் ஜெஃப்ரிக்கும் நடந்த சண்டை அது போட்டியின் போது நடந்தது தான். அதை விடுத்து ஜெஃப்ரி வெளியே வந்தாலும் நாங்க சகஜமா தான் பழகுவோம். எங்களுக்கு உள்ளே வேற எந்த விதமான மனக்கசப்புக்களும் இல்லை என சாச்சனா தெரிவித்துள்ளார்.
Listen News!