பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் முடிந்த கையோடு தான் நடித்துள்ள பேபி ஜான் திரைப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸரா பக்கத்தில் ப்ரோமோஷன் நேரத்தில் எடுத்த அழகிய புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலரை மணந்த கீர்த்தி திருமணம் முடிந்த கையோடு திரைப்பட ப்ரோமோஷன்களில் கலந்து கொண்டுவருகிறார். அப்போது பேபி ஜான் படக்குழுவினருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்து உள்ளார். அதில் தயாரிப்பாளர் அட்லீ, வருண் தவான் உட்பட படக்குழுவினர் இருக்கிறார்கள். மேலும் கீர்த்தி அழகிய ஊதா நிறஉடையில் ஜொலிக்கிறார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் இறுதியாக வருண் தவான் நடிப்பில் வெளியாக இருக்கும் பேபி ஜான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் எதிர் வரும் 25ம் திகதி கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தினை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
Listen News!